பீஜிங்

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 810 ஐ எட்டியதால் இது சார்ஸ் உயிரிழப்பை விட அதிகரித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.   அத்துடன் இந்த வைரஸ் தொற்று சீனாவைத் தவிர 27 நாடுகளுக்குப் பரவி உள்ளது.   இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.   இந்த தொற்றுக்கு இன்னும் சரியான மருந்து கண்டறியப்படாமல் உள்ளது.

சீன அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் 810 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த தகவலில்  முந்தைய சார்ஸ் வைரஸ் தாக்குதலில் நடந்த உயிரிழப்பை விட இது அதிக எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரானா வைரஸால் சீனாவை தவிர அதிக பட்சமாக ஜப்பானில் 86 பேரும் சிங்கப்பூரில் 93 பேரும் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.  இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சீனாவுக்குச் சென்று வரும் எந்த நாட்டவரும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசுஅறிவித்துள்ளது.