டெல்லி: டெல்லி சட்ட சபை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்ட சபை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தோ்தலில் 11 தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்லவும், பூத் ஸ்லிப் இல்லாத நிலையில் க்யூ ஆா் கோடு உதவியுடன் தங்களது பெயரை சரி பார்த்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பாபர்பூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தேர்தல் அதிகாரி உதம் சிங் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.