புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்காத காரணத்தால், தேவையான மானியச் சலுகைகளை வழங்குவதற்கு உரத்துறை அமைச்சகம் திண்டாடி வருவதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது; மத்திய ரசாயன அமைச்சகம் சார்பில் மத்திய நிதியமைச்சகத்திடம் ரூ.1.05 லட்சம் கோடி கேட்கப்பட்டதாகவும், ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதோ ரூ.71000 கோடிதான் என்றும் கூறப்படுகிறது.

எனவே, நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது. இந்தாண்டு ஒதுக்கீடு கடந்தாண்டைவிட 11% குறைவு. எனவே, பெரியளவில் குவிந்திருக்கும் நிலவைத் தொகையை வழங்குவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நிதியமைச்சகத்திடம் கூடுதல் நிதி கேட்கப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரசாயத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இதுதொடர்பாக கூடுதல் நிதியுதவி கேட்டு, நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதவுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.