டில்லி
இந்திய விமானங்களில் சீன நாட்டிலிருந்து வருபவர்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் பரவி வரும் கொனோரா வைரஸ் வேறு பல நாடுகளிலும் பரவி வருகிறது.
இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது.
இந்தியாவில் சீனாவிலிருந்து வந்த கேரளாவைச் சேர்ந்த மூவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஹாங்காங்கில் இருந்து வந்த சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சீனாவொஇல் இருந்து வரும் யாரும் இந்திய விமானங்களில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel