பட்ஜெட் தொடர்ச்சி….
மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-ஐயும் பங்குச்சந்தையும் பட்டியலிடுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி-யில் தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்க அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் பத்திரங்களில் அன்னிய நேரடி முதலீடு வரம்பு 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது (தற்போது இந்த வரம்பு 9%). என்றும் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தவருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் நலனுக்கு 53,700 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.