டெல்லி:
நாட்டின் 2020-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிதி அமைச்சர்,. நாட்டிற்கு ஐந்து முக்கிய அம்சங்கள் தேவை என திருக்குறளை எடுத்துரைத்து பேசினார்.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து என்ற திருக்குறளை தமிழில் கூறி பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் விளக்கம் தெரிவித்தார்.
வள்ளுவரின் குறளை பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைபடுத்தி வருகிறார் என்று பெருமைப்படுத்தி பேசினார்.
குறள் 738: பொருட்பால்:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
விளக்கம்:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.