பட்ஜெட் தொடர்ச்சி…..
2020-21 ஆம் ஆண்டு கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இருப்பதாக தெரிவித்த நிதி அமைச்சர் திறன் மேம்பாட்டு துறைக்கு 3,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினால்ர.
விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று கூறியவர், நாட்டின் சிறந்த 100 நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் வளங்கும் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தும் என்றார்.
நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இன்டர்ன்ஷிப் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.