
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், சின்னத்திரை இயக்குநர், ‘கும்பகோணம் டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இயக்குநர் என்.கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.
திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பட்டம் பெற்ற என்.கிருஷ்ணசாமி ‘சந்திரலேகா’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
இவர் முதலில் இயக்கிய ‘ஒன்றே குலம்’ திரைப்படத்துக்கு அப்போதைய முதல்வர் காமராசர் தலைப்பு வைத்துள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ளபாபநாசத்தை பூர்வீகமாகக்கொண்ட என்.கிருஷ்ணசாமி சென்னை கே.கே.நகரில் வசித்துவந்தார்.
இன்று காலை 10.30 மணிஅளவில் நெசப்பாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடந்தேறின .
Patrikai.com official YouTube Channel