டெல்லி:

காத்மா காந்தியின் 72-வது நினைவு நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செய்தனர்

தேசத்தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஜனவரி 30, 1948 அன்று நாதுராம்  கோட்சே என்பவரால், பில்லா மாளிகையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது 72வது நினைவுதினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இதற்கிடையில் மத்தியஅரசு, காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடமான காந்தி ஸ்மிரிதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசத்தந்தை படுகொலை செய்யப்பட்ட இடமான “காந்தி ஸ்மிரிதியை” பார்வையிட பொதுமக்களுக்கு தடை!