லண்டன்:

ங்கி மோசடியில் சிக்கி உள்ள விஜய்மல்லையா இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் நிலையில், அவர்மீது கத்தார் நாட்டைச் சேர்ந்த வங்கி தொடர்ந்த வழக்கில், அவரது சொகுசு படகை விற்பனை செய்து கடனை அடைக்க லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சொகுசு படகுடன் விஜய்மல்லையா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா, வங்கிகள் வாங்கிய 9ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொல்லை காரணமாக இந்தியாவில் இருந்து தலைமறைவாகி, இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

கடந்த 2016ம் ஆண்டு அவர் இந்தியாவில் இருந்த வெளியேறிய நிலையில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, லண்டனில் விஜய்மல்லையா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமினில் உள்ள விஜய்மல்லையா, நாடு கடத்த இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன்லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கத்தார் நாட்டு தேசிய வங்கி ஒன்றிலும் விஜய்மல்லையா கடன் வாங்கியிருப்பதா, அந்த வங்கி தரப்பில் லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான ‘போர்ஸ் இந்தியா’ கத்தார் தேசிய வங்கியில் சுமார் ரூ.47.23 கோடி கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி அடைக்காத நிலையில், அதற்கு செக்யூரிட்டி உத்தரவாதம் வழங்கிய விஜய் மல்லைமீதும் வழக்கு தொடர்ந்தது. மனுவில்,  போர்ஸ் இந்தியா நிறுவனம் வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.40 கோடி பாக்கி தரவேண்டியுள்ளது. இந்த பாக்கி தொகைக்காக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு படகை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து,  நேற்று லண்டன் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், விஜய் மல்லையாவின்  சொகுசு படகை விற்று அந்த பணத்தை கத்தார் தேசிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.