டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் சிங் விவகாரத்தை தவிர அவசரமான வழக்கு வேறு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியிருக்கிறார்.
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் முகேஷ் சிங். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை நிராகரிக்கப்பட்டது. அததற்கு எதிராக கடந்த சனிக்கிழமையன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, முகேஷ் சிங்கின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்குமாறு அவரது வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் இன்று முறையிட்டார்.
இதையடுத்து, யாரேனும், பிப்.1ஆம் தேதி தூக்கிலடப்பட உள்ளனர் என்றால், அதனை விட அவசரமானது வேறு எதுவும் இல்லை என்று கூறிய தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிட அறிவுறுத்தி உள்ளார்.
குற்றவாளிகள் பிப்.1ம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில், அவர்களது மனுவுக்கே முதலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு நிர்பயா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 1-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்படுகிறது.