ராமநாதபுரம்

மிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பணியினை தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகின்றது.   இந்த ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் குரூப் 4 ஊழியர்களுக்கான தேர்வை நடத்தியது.  இந்த தேர்வில் 5575 மையங்களில் மொத்த 16.3 லட்சம்  பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது தரவரிசைப்பட்டியலில் அதிகமாக ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளின் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் இருந்தது தெரிய வந்தது.  முதல் 100 இடங்களில் இருந்தவர்கள் முழுவதும் இந்த இரு மையங்களில் தேர்வு எழுதி உள்ளனர்    இதையொட்டி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி 99 தேர்வர்கள் முறைகேடு செய்துள்ளதைக் கண்டு  பிடித்தனர்.

தொடர்ந்து வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதில் சில அதிகாரிகள் மற்றும் தேர்வு எழுதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் நடந்த விசாரணையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கி வரும ஒரு முன்னணி பயிற்சி நிறுவனத்துக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளது வெளியாகி உள்ளது  இந்த நிறுவனம் ஏற்கனவே வங்கித் தேர்வு முறைகேட்டில் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.