ஸ்ரீநகர்

காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து மக்கள் உரிமை ஆர்வலர் காலித் ஷா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

 

டிவிட்டர் பதிவில் உள்ள உமர் அப்துல்லா படம்

காஷ்மீரில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண் 370 விலக்கப்பட்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  இதற்கு முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மாநிலம் எங்கும் க்ட்டுப்பாடுக்ள் விதிக்கப்பட்டன.   முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. இது குறித்து ஆர்வலர் காலித் ஷா ஒரு டிவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர்,

“கடைசியாக நாம் மறந்து விட்டோம்.

3 முன்னாள் பிரதமர்கள் அதில் ஒருவர் மக்களவையில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் மற்றும் பல மூத்த தலைவர்கல் இன்னும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயகத்தை  ரத்து செய்வது ஒரு மிகவும் மோசமான அத்துமீறல்

வாட்ஸ்அப்பில் வலம் வரும் உமர் அப்துல்லா  புகைப்படம்” 

எனப் பதிந்து உமர அப்துல்லாவின் புகைப்படத்தை பதிந்துள்ளார்.