சென்னை:

பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தேமுக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த், ரஜினி அம்பு மட்டுமே என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அம்பை எய்தது யார்? பிரேமலதா யாரை கைகாட்டுகிறார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என்று கூறிய ரஜினி, தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறி 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், கடந்த வாரம் துக்ளக் விழாவில் பேசும்போது, பல ஆண்டு முன்பு நடைபெற்ற பெரியார் போராட்டம் குறித்த தகவலை பேசி தமிழக அரசியல் களத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டார்.

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலுக்கு வருவதாக சொல்…….லி வரும் ரஜினி, தற்போது பெரியார் குறித்து பேசி சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் கருத்துக்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து மெர்சலாக்கி வரும் நிலையில், பாஜகவோ ரஜினிக்கு ஆதரவாக கொடிபிடித்தது. ஆனால், பாமக, தேமுதிக கட்சிகள் மட்டுமே தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தா மல் இருந்து வந்தது.

இது அரசியல் நோக்கர்களின் புருவங்களை உயரச்செய்தது. சாதாரணமாக  ரஜினி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றாலே, மூக்கை நுழைக்கும் பாமக, பெரியார் விவகாரத்தில் அமைதி காத்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

சமீபத்தில் பாஜக மத்தியஅரசு, ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியதற்க, பாமக ராமதாஸ் வரவேற்றும், ரஜினியையும் வாழ்த்தியிருந்தார். இதையும், தற்போதைய அமைதியையும் இணைத்த  சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

இந்த சூழலில்தான் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென செய்தியாளர்களை சந்தித்து ரஜினி குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.

பெரியாரைப் பற்றி ‘துக்ளக்’ விழாவில் ரஜினிகாந்த் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதையும் யோசித்து பேசக்கூடிய அவர் இந்த கருத்தை பேசுகிறார் என்றால் அவரை வேறு யாரோ இயக்குகிறார்கள் என்றும், அவர் வெறும் அம்பு தான் என்று கூறினார்.

பிரேமலதாவின் கூற்றுப்படி ரஜினி வெறும் அம்பு என்றால், அதை எய்தவர் யார், அம்புக்கு வில்லாக செயல்பட்டது எந்த கட்சி என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ரஜினி, தனது பேச்சு வருத்தம் தெரிவிக்க முடியாது, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாதாரணமாகவே எந்தவொரு  விஷயங்கள் குறித்தும்  கருத்து தெரிவிக்கும்போது, அமைதியாகவும், தனது பாணியிலேயே கழுவும் மீனில் நழுவுவதுபோலவே நடந்துகொள்வார். ஆனால், பெரியார் விஷயத்தில், மன்னிப்பு கேட்க முடியாது என்று அவர் முரண்டு பிடித்தது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது…

இந்த பரபரப்பான சூழலில்தான் பிரேமலதாவும் ரஜினி வெறும் அம்பு என்று கூறியது, அரசியல் கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில்  பாஜக பல வருடங்களாக இருந்து வந்தாலும், தமிழக மக்களிடையே அதற்கு வாக்கு வங்கி கள் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு என  தனியாக எந்தவொரு அடித்தளமும் தமிழகத்தில்  இல்லாத நிலையில், ரஜினியை இழுக்க வலைவீசியது.

ஆனால், ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக  நேரடியாக களத்தில் இறங்கினாலோ, ரஜினியே பாஜகவில் இணைந்தாலோ,  அவரது ரசிகர்கள் அவரிடம் இருந்து விலகி விடுவார்கள் என்பது ரஜினிக்கும், பாஜகவுக்கும் தெரியும்.

இதை மனதில்கொண்டே, ஓய்வு வயதை தாண்டிய ரஜினி, தற்போது, தமிழக  அரசியல் களத்தில்  ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் வகையில், மத்திய பாஜகவுக்கு மறைமுறைமாக ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், இந்துத்துவாவை கையில் எடுத்துக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதன் வெளிப்பாடே, அவர் கடந்த 1971ம் ஆண்டைய பெரியார் போராட்டம் குறித்த விமர்சனம்….

தறபோது பிரேமலதாவின் நாசுக்கான விமர்சனம் காரணமாக ரஜினியின் பெரியார் விமர்சனத்துக்கு காரணமான பூனைக்குட்டி (பாஜக) வெளியே வந்துவிட்டது…

போகப்போகத் தெரியும்… ரஜினி அரசியல்வாதியா… அல்லது. மெ…….லா?

(பாஜக கூட்டணியில் அதிமுகவுடன் தேமுதிக, பாமக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது)