சென்னை:

குமரி மாவட்டம் கலியக்காவிளை சுங்கச்சுவாடியில் பயங்கரவாதிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளதால், இது தொடர்பான வழக்கு விசாரணையை என்ஐஏக்கு மாற்றும்படி தமிழகஅரசு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 8-ம் தேதி  கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளை சோதனை சாவடியில்  இரவு பணியின்போது இருந்த  சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில், வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொலை சம்பந்தமாக  குமரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு பயங்கரவாகிள் உள்பட கேரளா மற்றும் கர்நாடகாவிலும் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின்கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டளள்து. இதைத்தொடர்ந்து, வில்சன் தொடர்பான வழக்கை  என்.ஐ .ஏ க்கு  விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

வில்சன் கொலை வழக்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ள நிலையில்,  விசாரணையை என்.ஐ .ஏக்கு மாற்ற  கோரப்பட்டுள்ளது.