சென்னை:
தனியார் ஊடகமான கலர்ஸ் தமிழ் டிவியில், கோடீஸ்வரி என்ற பொழுதுபோக்கு மற்றும் புதிர் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்குகொண்டு, சொற்ப அளவிலான பரிசுகளை வென்றுள்ள நிலையில், சமீபத்தில் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் கவுசல்யா கலந்துகொண்டு, ரூ.1 கோடி பம்பர் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மதுரையைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா என்பவர் பங்கேற்று விளையாடி என்பவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்குகொண்டு ராதிகாவின் கேள்விக ளுக்கு அசத்தலாக பதில் அளித்து வந்தார். அதிர்வுகள் மற்றும் வாய் அசைவுகள் மூலமாக கவுசல்யா அளித்த பதில்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையில் ரூ.1 கோடிக்கான பரிசுத்தொகையை அவர் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, , தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை கெளசல்யா கார்த்திகாவுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், தொகுப்பாளினியுமான ராதிகா சரத்குமார், “கவுசல்யாவின் வெற்றி உண்மையிலேயே ஒரு உத்வேகம் மற்றும் பலரை ஊக்குவிக்கும். நான் அவருக்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த சாதனை அவருடைய வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கலர்ஸ்தொலைக்காட்சியுன் தலைமை வணிகப்பிரிவுஅதிகாரி, “கவுல்யாவின் வெற்றி அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கும் பெண்களுக்கு நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கமாகும்” என்றார்.
ரூ.1 கோடி பரிசை வென்ற மாற்றுத்திறனாளியான கவுசல்யா, பி.எஸ்சி, எம்.எஸ்சி முடித்து எம்பிஏ படித்துள்ளார், தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்…
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.