டில்லி
இந்தியப் பொருளாதார வீழ்ச்சியால் உலகப் பொருளாதாரம் 80% பாதிப்படையும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதார மந்த நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சர்வதேச நாணய நிதிய நிபுணர் கீதா கோபிநாத் செய்தியாளருக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 50 ஆம் ஆண்டு விழாவில் கலந்துக் கொள்ள வந்த போது இந்த பேட்டியை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் கீதா கோபிநாத், “இதிய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2.9% ஆகவும் 2020 ஆம் வருடம் 3.3% ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாத புள்ளிவிவரங்களின்படி அது எதிர்பார்ப்பை விட 0.1% குறைந்துள்ளது.
இதனால் இந்த இரு வருடங்களிலும் இந்தியப் பொருளாதாரம் மேலும் கடும் சரிவைச் சந்திக்க நேரிடும்.
இந்த சரிவினால் சர்வதேச பொருளாதாரம் சுமார் 80% பாதிப்பு அடையும்.
தற்போதுள்ள நிலையின்படி இந்தியா பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் மூலம் வரும நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் முன்னேற வாய்ப்புள்ளது. அத்துடன் நிறுவன வரி குறைப்பு போன்றவையும் இந்திய பொருளாதார சரிவை ஓரளவு குறைத்து வளர்ச்சியை ஏற்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.