நியூயார்க்

மெரிக்க ஊடகமான வால்ஸ்டிரீட் ஜெனரல் பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.   ஆனால் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அவற்றை மறுத்து வருகின்றனர்.   இது குறித்து எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் இருந்து வெளியாகும் வால்ஸ்டிரீட் ஜெனரல் பத்திரிகையில் கிருஷ்ண மேமானி பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு,

”தற்போது இந்தியாவில் பல விவகாரங்களை நீங்கள் கவனிக்க வேண்டி உள்ளது என்பதை நான் அறிவேன்.  ஆனால் எனது கருத்துப்படி நீங்கள் இந்திய பொருளாதார மந்தநிலையை மேம்படுத்துவது குறித்துக் கவனிக்கவேண்டியது  உங்கள் முதல் பணியாகும்.    நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட உண்மையான வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இதை மாற்றுவது மிகவும் அவசியமாகும்.

தங்களுக்கு வந்துள்ள பல ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களில் இருந்து தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.  எனவே நீங்கள் உடனடியாக மேலும் விவாதம் செய்வதை விடுத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு மக்கள் அறுதி பெரும்பான்மையை அளித்துள்ளனர்.  அதைக் கொண்டு நீங்கள் குறுகிய மற்றும் நீண்டகால கொள்கைகள் மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  மற்ற பிரச்சினைகளை விடப் பொருளாதார மந்த நிலை முக்கியமானவை ஆகும்.   மற்ற பிரச்சினைகள் உங்களுக்காக காத்திருக்கும்.  ஆனால் பொருளாதார பிரச்சினைகள் காத்திருக்காது.”

என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.