கொல்கத்தா:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க சட்டமன்றத்தில் வரும் 27ந்தேதி சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேறு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி உள்ளன.

ஏறக்னவே CAA க்கு எதிராக கேரளா மற்றும் பஞ்சாப் சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திலும், சிஏஏக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.

சிஏஏக்கு எதிரான தீர்மானம், மேற்கு சட்டமன்றத்தில் வரும் 27ந்தேதி அன்று பிற்பகல் 2 மணி நடைபெறும் சிறப்பு அமர்வில் விவாதித்து நிறைவேற்றப்படும் என்றும், தீர்மானத்தை அனைத்து தரப்பினரும், ஆதரிக்க வேண்டும் என்று  நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 9ந்தேதி அன்று, என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தற்போது சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.