ஜெனிவா: இந்திய நாட்டில் 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிட, இங்குள்ள 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு அதிகம் என்ற மோசமான உண்மையை ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 50வது வருடாந்திரக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “உலகின் 2153 கோடீஸ்வரர்கள், 460 கோடி ஏழை மக்களைவிட அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தளவில் 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பானது, 2018-19ம் நிதியாண்டின் பட்ஜெட் தொகையான ரூ.24.42 லட்சம் கோடியைவிட அதிகம்.
ஒரு பெண் தொழிலாளர் ஓராண்டில் சம்பாதிக்கும் வருவாயை, ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓ, வெறும் 10 நிமிடங்களிலேயே சம்பாதித்து விடுகிறார்.
இந்தியாவில் 70% ஏழைகளின் சொத்து மதிப்பைவிட, 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், உலகளவில் உள்ள 22 கோடீஸ்வரர்களின் மதிப்பு, ஆப்ரிக்க கண்டத்திலுள்ள ஒட்டுமொத்த பெண்களின் மதிப்பைவிடக் கூடுதலாகும் என்பதான பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.