டில்லி

ந்த வருடத்துக்கான வரி வருமானத்தில் இலக்கை விட ரூ. 2.5  லட்சம் கோடி குறையலாம் என  முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டான 2019-20 ஆம் ஆண்டில் கார்பரேட் வரி வருவாய், கலால் வரி, சுங்க வரி போன்றவை மந்தமாகவே இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதில்  கலால் வரியில் ரூ.2.2 லட்சம் கோடியும், சுங்க வரியில் ரூ.1.06 லட்சம் கோடியும் குறைவாக வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது செலவுகள் அதிகரித்து வரி வருவாய் குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவது கடினம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க் , ” இந்த நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.     அரசின் வரி வருவாய் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் மந்தமாகவே இருந்து வருகிறது.   ஒரு பக்கம் அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்னொரு பக்கம் அரசின் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டியின் கீழ் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஒரு சில மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் இலக்கை அடையவே முடியவில்லை. இத்தகைய சூழலில் இந்த ஆண்டில் வரி வருவாய் இலக்கை அடைவது கடினம்

மொத்தம் இந்த ஆண்டில் ரூ.24.59 லட்சம் கோடி வரி வசூல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.,  அதில் ரூ.2.5 லட்சம் கோடி குறைவான அளவிலேயே வரி வசூல் இருக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது வெறும் 1.2 சதவீதமாகும்.

இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.8.09 லட்சம் கோடி போக, மத்திய அரசின் வரி வருவாய் ரூ.16.50 லட்சம் கோடி மட்டுமே இருக்கும். 2018-19ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.13.37 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருந்தது. எனவே இந்த ஆண்டில் வரி வருவாய் ரூ.3.13 லட்சம் கோடி குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.