ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் அபி சரவணன்,அப்புகுட்டி ,வெண்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராஜா பவதாரணி இசையமைத்துள்ள ‘மாயநதி’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசைத் தட்டை வெளியிட்டனர்.

அப்போது பேசிய இயக்குனர் அமீர் “உலக வராலாற்றிலேயே இப்படி ஒரு இசைக்குடும்பம் (இளையராஜா) இருந்ததில்லை. தமிழ் சினிமா செய்த பாக்கியம் இது என்று கூறினார் .

ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும் தான் அதற்காக ஃபேஸ்புக், டிவிட்டரில் கருத்து சொல்லிக்கொண்டிருப்பதால் பயனில்லை .

சினிமாவில் வெற்றி தான் முக்கியம்.என்னுடைய சந்தன தேவன் படம் ஆரம்பித்து 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தன.ஆனால் கடந்த 3 வருடமாக அந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் பொது மேடையில் பேசக் கூடாது. மத்திய மாநில அரசுகள் குறித்து விமர்சனம் செய்ய கூடாது என நிபந்தனை வைத்ததால் அந்தப் படத்தை நிறுத்தி வைத்தேன்.

திமுக ஆட்சியில் தான் எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டி உருவாக்கப்பட்டது.கலைஞர் இருக்கும் போது தான் தமிழ் சினிமா குறித்த பிரச்னைகளை கேட்டு கொண்டு இருந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதன் பெயரை ஜெ.ஜெ. ஃபிலிம் சிட்டி என மாற்றினார்.

தமிழகத்தில் தான் தமிழ் சினிமா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அவரவர் தேவையை நிறைவேற்றிக் கொண்டு முன்னேறுகிறார்கள். தவிர துறை சார்ந்த பிரச்னைகளை பற்றியே முதல்வர்களிடம் கொண்டு பேசியதே இல்லை” இதுவரை உங்களை கேள்வி கேட்டு கொண்டு இருந்த நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீண்ட நாளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையில் முடித்தார் அமீர் .