டெல்லி:
நாட்டின் பொதுபட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்குவதை முன்னட்டு, பாரம்பரிய முறைப்படி, நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2வது ஆண்டாக அல்வா கிண்டி பணியை தொடங்கி வைத்தார்.
மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சம்பிரதாய முறைப்படி 2வது ஆண்டாக இன்று அல்வா கிண்டி பணிகளை தொடங்கி வைத்தார்
அந்தகால மரபுபடி, நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தின்படியே நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இதையடுத்து 2020-21ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது.