டெல்லி:
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 22ந்தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் கருணை மனு விவகாரம் காரணமாக, பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு உள்ளது.
கொடூரமான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது கால தாதம் செய்யப்பட்டு வருவதும், சில வழக்கறிஞர்கள் திட்டமிட்டு, குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு வழக்குகளை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதும், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் சட்டத்தின் மீதான நம்பக்கத்தன்மை மக்களிடையே வலுவிழந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியது. ஆனால், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பல்வேறு சட்ட பிரிவுகளை காரணம் காட்டி, இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றவாளிகள் நான்கு பேரும் ஜனவரி 22ம் தேதி தூக்கில் போடும்படி டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், முகேஷ் சிங் என்ற குற்றவாளி, கருணை மனு தாக்கல் செய்ததாலும், தண்டனையை நிறுத்தி வைக்கும்படி வழக்கு தொடர்ந்ததாலும், தூக்கு தண்டனையை நிறைவேற்றப்படுவதில் சிக்கல் நீடித்தது.
இதற்கிடையில், குற்றவாளியின் கருணைமனு, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை பிப்ரவரி 1-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போட வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மதுமீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், விசாரணை நடத்த ஒப்புக்கொண்டால், குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உருவாகும்…
இந்த நிலையில், கொடூரமான குற்றங்களை இளைத்த குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் கால தாததம் ஏற்படுவதும், குற்றவாளிகளுக்காக சில வழக்கறிஞர்கள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்குவதும் பொதுமக்களிடையே ஆத்திரத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், பொதுமக்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி விடும் என்பதை அனைவரும் மறக்கவும் முடியாது… மறுக்கவும் முடியாது….