டெல்லி:

வறான வீடியோ விவகாரத்தைத்  தொடர்ந்து,  டிவிட்டர் இணையதளத்தில் இருந்து மேகாலாய கவர்னர் ததகதா ராய்  வெளியேறினார்,

சமீபத்தில் மேகாலயா கவர்னர் ததகதா ராய்  தனது டிவிட்டர் பக்கத்தில் இரு பெண்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோவை பகிர்ந்து, முஸ்லிம்கள் பாகிஸ்தானில் ஒரு இந்து பெண்ணை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்கள், பாகிஸ்தானில் இந்து பெண்கள் தாக்கப்படுவதாக கூறி டிவிட் போட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த வீடியோவை வெளியிட்ட செய்தி நிறுவனமான ஆல்ட் நியூஸ் , இது பழைய வீடியோ என்று மறுப்பு தெரிவித்தது. ஆனால், கவர்னர் ததகதா ராய் கூற்றை மறுத்து செய்தி வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிவிட்டரில் இருந்து கவர்னர் ததகதா ராய் வெளியேறினார்.

கடந்த புதன்கிழமை அன்று மேகாலயா கவர்னர் ததகதா ராய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், இரண்டு பெண்கள் இரண்டு ஆண்களால் தாக்கப்படும் நிகழ்ச்ச காணப்பட்டது. இதுகுறித்து கருத்து பதிவிட்டிருந்தவர்,  வீடியோவில் உள்ள பெண்களில் ஒருவரான இந்து, “பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களால் தனது தாய் மற்றும் குழந்தைக்கு முன்னால் தாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்” என்று கூறியிருந்தார்.

அத்துடன், இருப்பினும், முட்டாள் இந்துக்கள் என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) ஐ எதிர்க்கின்றனர். 150 கோடி முஸ்லிம்களுக்கு 55 இஸ்லாமிய அரசுகள் உள்ளன. 250 கோடி கிறிஸ்தவர்களுக்கு 69 நாடுகளும், 150 கோடி இந்துக்களுக்கு எந்த நாடும் இல்லை ”என்று திரு ராய் வங்காள மொழியில் டிவீட் செய்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தி நிறுவனமான ஆல்ட் செய்து, இந்த வீடியோ பழையது என்று கூறி அதை நீக்கியது. மேலும், இந்த வீடியோவுக்கும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது.

மேலும், இந்த வீடியோவானது, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும், அங்க ஏழைப் பெண்கள் பொதுமக்கள் பார்வையில் தூக்கி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்ற கூற்றோடு பகிரப்பட்டது, இது , 2019 டிசம்பரில் வெளியானது என்றும் தெரிவித்திருந்தது. அத்துடன்,  “வீடியோவில் உள்ள ஆண்களில் ஒருவர் அவர்கள் கடத்த முயற்சிக்கும் பெண்ணின் கணவர். வயதான பெண் அந்தப் பெண்ணின் தாய் என்றும், இது ராஜஸ்தானின் தானி கிராமத்தில் ஒரு குடும்ப தகராறு என்றும்,விளக்கம் அளித்தது.

மேலும், ஆளுநர் கூறியது போல் பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்  மறுப்பு தெரிவித்தது.

இதனால், கோபமடைந்த கவர்னர் ததகதா ராய் , ஆல்ட் நியூஸ்  இணையதளத்தின் விளக்கத்தை ஏற்க மறுத்த நிலையில்,  “உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளங்கள் என்று அழைக்கப்படுபவை சமூக ஊடகங்கள் முழுவதிலும் ஊழலில்  சிக்கித் தவிக்கின்றன. ‘சரிபார்ப்பு’ மற்றும் அதன் விளைவாக அவர்கள் செய்யும் தகவல்களைத் தவிர்ப்பது தவறானது, ஒருபக்கச் சார்பானது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும்,  இந்த சம்பவம் “ராஜஸ்தானில் நடந்தது, பாகிஸ்தானில் அல்ல” என்று “ஏற்கவில்லை” என்று கூறினார். எல்லோரும் ஏன் “வருத்தப்படுகிறார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.  “வாதங்களுக்காக, பாக்கிஸ்தானில் இது நிகழ்ந்தால் மக்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள்? [ஏனென்றால்] பாகிஸ்தான் விமர்சிக்கப்படுகிறதா? ”என்று அவர் பெங்காலி மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த நிலையில், ததகதா ராய்  டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.