கொழும்பு:

லங்கையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. இதனால் விரைவில் அங்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில், அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் காரணமாக, அங்கு உள்நாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது, அங்கு விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், பல்வேறு நடவடிக்கை களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நாட்டின்  சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒருபகுதியாக,  தனியார் ஹெலிகாப்டர்கள் சேவைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், உள்நாட்டு விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளையும், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கு வருடத்திற்கு 20 இலட்சத்திற்கும்  அதகமான சுற்றுலா பயணிகள் வந்துசெல்லும் நிலையில், மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், உள்நாட்டு விமான சேவைக்கான தடை நீக்கப்பட்டு இருப்பதாக இலங்கை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக விரைவில் உள்நாட்டு சேவை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.