டெல்லி: நிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி இருக்கிறார்.
நிர்பயா குற்றாவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வரும் 1ம் தேதி திகார் சிறையில் நிறைவேற்றப்படுகிறது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது.
இந் நிலையில் தண்டனை தேதி அறிவிக்கப்படும் முன்பு, ஆம் ஆத்மியால் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை என்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறி இருந்தார்.
அவரது கருத்துக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி இருவரும் வேறுவேறு விஷயங்களை பற்றி கூறுகின்றனர்.
ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. குற்றம் நடந்த 6 மாதங்களுக்குள் தவறு செய்தவர்களை தூக்கிலிடும் வகையில் ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும்.
நிர்பயா விவகாரத்தில் அரசியல் இல்லை. அவரது தாயார் தவறாக வழிநடத்தப்படுகிறார். இந்த விஷயத்தில் டெல்லி அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறினார்.