லக்னோ: ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை வருவாய்த்துறை புள்ளி விவரங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 27,000க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்துபவர்கள் கட்டிய தொகையில் இருந்து பணத்தை திரும்ப பெற தகுதியுடையவர்கள் மூலம் ரூ. 28,000 கோடிக்கு மேல் பணம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பா் வரை 7,164 நிறுவனங்கள் மீது 6,641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கள் மூலம் ரூ.1,057 கோடி மீட்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக அளவாக உத்தரகாண்டில் தான் அதிக போலியான கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டெல்லி, ஜெய்ப்பூா், பஞ்ச்குலாவிலும் அதிக அளவிலான மோசடி நடைபெற்றுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய நபர் கடந்த டிசம்பர் முதல் சிறையில் இருக்கிறார். இது சம்பந்தமான ஒரு வழக்கில், 50 கோடிக்கு மேல் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்த ஒரு ஏற்றுமதியாளர் 3.90 கோடி திரும்பப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் நிறுவனத்தின் மொத்த ஜிஎஸ்டி பணம் வெறும் ரூ.1,650 ஆகும்.

மற்றொரு வழக்கில், ரூ. 51,201 க்கு ரொக்கமாக வரி செலுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஏற்றுமதியாளர் திரும்ப பெற்றது  9.59 கோடியாகும்.