
2007-ம் ஆண்டு வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வெளியான முதல் படம் ‘பொல்லாதவன்’.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, சிங்களம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சேகர் சூரி இயக்கத்தில் இதன் தைக்களத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற பெயரில் இந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தில் கர்ணன் நாத், நாதலியா, அபிமன்யு சிங், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு .
Patrikai.com official YouTube Channel