கவுகாத்தி: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் வெளிப்படத் துவங்கியுள்ளது. தமிழக வீரர்கள் தடகளப் பிரிவில் மட்டும் இதுவரை மொத்தம் 21 பதக்கங்களை வென்றுள்ளனர்.
கவுகாத்தியில் நடைபெற்றுவரும் கோலோ இந்தியா என்ற பெயரிலான அகில இந்திய இளைஞர் விளையாட்டுத் திருவிழாவில், தமிழகம் ஒட்டுமொத்தமாக 25 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் தடகளப் பிரிவில் மட்டும் மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது. சரண், செந்தில் குமார், முகமது அனாஸ், அரவிந்த், விஜுஸ்இ முகமது சாத், பவித்ரா, பபிஷா மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்ட தமிழக வீரர்கள் தடகளப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தினர்.
தமிழகம் இதுவரை பெற்றுள்ள 25 பதக்கங்களில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் அடங்கும். தடகளப் பிரிவில் பெற்ற தங்கங்களின் எண்ணிக்கை 7. இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தமாக 70 பதக்கங்களுடன் மராட்டிய மாநிலம் முன்னிலை வகித்து வருகிறது.