டெல்லி:
நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் (ஜனவரி) 22ந்தேதி காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள 4 பேரில் உடல் எடை கொண்ட போலியான மூட்டைகள் உருவாக்கப்பட்டு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டதாக சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இந்த படுபாதகமான செயலைச் செய்த 2 பேரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொருவர் சிறுவர் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் மற்ற 4 குற்றவாளகிளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி வரும் 22ந்தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகளின் உடல் எடை அளவிலான போலி உருவங்கள் தயாரிக்கப்பட்டு, போலி மரணதண்டனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு குற்றவாளிகள் எடை அளவிலான குப்பைகள் மற்றும் கற்களால் நிரப்பப்பட்ட சாக்குகளைப் பயன்படுத்தி டம்மீஸ் உருவாக்கப்பட்டு,போலி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டதாகவும், குற்றவாளிகள் 4 பேருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்திய படி, தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், தூக்கு தண்டனையை நிறைவேற்ற, உ.பி. சிறைச்சாலையில் இருந்து பவன் ஜல்லத் என்பவர் வர இருப்பதாகவும், சிறை எண் 3 இல் நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளனர்.
தூக்கிலிடப்பட உள்ள 4 குற்றவாளிகளும் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக தினமும் சிறை அதிகாரிகள், மருத்துவர்கள் உரையாடல்களை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.