டெல்லி: நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபல ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் மாணவர்களை மர்ம கும்பல் தாக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ், இடதுசாரிகள்,திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை பிரபல நடிகை தீபிகா படுகோனே கண்டித்தார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.
அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் தீபிகாவின் செயலை பாராட்டி உள்ளார். ஆனால் நேரிடையாக அவரது பெயரை குறிப்பிடாமல் பாலிவுட் நடிகை என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு பாலிவுட் நடிகை தனது மவுனமான எதிர்ப்பை ஜேஎன்யூ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதன் மூலம் பதிவு செய்திருக்கிறார். அவரின் சமீபத்திய திரைப்படத்திற்கு ரிலீஸ் ஆவதில் ஆபத்து இருந்தாலும், நம்ரம எல்லாம் அவர் கவருகிறார், அனைவருக்கும் முன் மாதிரியாக, தூண்டுகோலாக இருக்கிறார் என்று கூறினார்.