சென்னை:
தமிழகத்தில், பேரூராட்சி மாநகராட்சி நகராட்சிக்கான சிறப்பு தனி அலுவலர்கள் பணிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு நியமனம் செய்து தமிழக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அதற்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கான சிறப்பு தனி அலுவலர்கள் பதவி மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யும் மசோதா இன்று தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே, டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனி அலுவலர்களின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டித்து அவசர சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அதற்கு பதிலாக இன்று இன்று சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.