நொய்டா:

த்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டார் 24 பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐசி மருத்துவமனையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றினர்.

உத்தரப் பிரதேசம் மாநில நொய்டாவின் செக்டார் 24 பகுதியில் செயல்பட்டு வரும் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று காலை திடீர் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட நோயாளிகளும் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியிலும், நோயாளிகளை அப்புறப்படுத்தும் பணியிலும் இறங்கினர். இதற்கிடையில், நோயாளிகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்களும் உதவி செய்தனர்.

இந்த நிலையில் தீயை தீயைணைப்பு துறையினர் கட்டுப்படுத்தி முழுவதுமாக அணைத்தனர்.  தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பு  குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. மின் விபத்து காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.