சென்னை:

ள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகள் தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினர்.

‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவு காகிதத்தில் தான் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய மேலும் 15 நாள் அவகாசம் கேட்டனர்.

அப்போது,  ஏராளமான வக்கீல்கள் ஆஜராகி, ‘‘உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகே டுகள் நடந்துள்ளன. முறையாக வாக்குகள் எண்ணப்படவில்லை. பல இடங்களில் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பல இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

சில வழக்கறிஞர்கள்,  ‘‘விடுமுறை கால நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஜன. 3ம் தேதி மாலை 5 மணிக்குள் ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டு மென தெரிவித்திருந்தது. ஆனால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை’’ என்று மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டினால்,

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.. ‘‘முந்தைய உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை தொடர்பான சிசிடிவி காட்சிகளை உடனடியாக பகல் 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான விசாரணை பிற்பகலில் நடக்கும்’’ என்றனர். பின்னர் நேற்று பிற்பகலில் மீண்டும் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின்போது  மாநிலஅரசு சார்பில்  கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், தேர்தல் ஆணைய வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது,  ‘‘சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளதாக கூறினார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதில் ஏன் காலதாமதம்? இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. போதிய கால அவகாசம் வேண்டும் என்றால் உடனடியாக அப்பீல் செய்திருக்கலாமே’’ என்று கேள்விக்கணைகளை வீசினர்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர், அரசுத் தரப்பில், ‘‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 509 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்ய  தொழில்நுட்ப ரீதியாக போதுமான கால அவகாசம் வேண்டும்’’ என்றும், ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேலும் 15 நாள் அவகாசம் கேட்டு இந்த நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்’’ என கூறினர்.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றத்தின் உத்தரவு காகிதத்தில் தான் உள்ளதா? அரசின் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்த நிலையில், சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யாதது தேவையில்லாத சந்தேகங்களுக்கு விலிவகுக்கும் என்றும், 3 நாளாக சிசிடிவி பதிவுகள் பதிவிறக்கம் செய்து வருவதாக மாநில தேர்தல் ஆணையம் கூறுவது நம்பும் படி இல்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை (நாளை) இன்று தொடரும் என்றும்  தள்ளிவைத்து  உத்தரவிட்டனர்.