ஈரானின் முக்கிய தளபதியாக கருதப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய தளபதியாக கருதப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவு மோசமடைந்த வருகிறது. அமெரிக்க அதிபரின் தலைக்கு ஈரான் விலை நிர்ணயித்துள்ள நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டுடன், டிரம்ப் பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே, நாளை மறுநாள் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷெரிப் இருந்த நிலையில், விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.