டெல்லி:
கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற முகமூடி கும்பல் தாக்குலுக்கு பின்னணியாக ஏபிவிபி (AkhilBhartiya Vidhya (Violence) Parishad) இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் சிலர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜே.என்.யு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி அணிந்த கும்பல், தடி, கம்பு, கம்பிகளுன் நடத்திய தாக்குதலில் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு, அடையாளம் தெரியாத நபர்கள் மீது கலவரம் மற்றும் சொத்துக்களை சேதம் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், வன்முறை தொடர்பாக ஏபிவிபி பிரதிநிதிகளுடன் சிலர் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாக உள்ளது. அதில், பேசிய அனிமா சொங்கர் (Ms AnimaSonkar) என்பவர், இந்த தாக்குதலை நடத்திய ஏபிவிபி இணை செயலாளருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று கூறுகிறார்.
இதன் காரணமாக ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாகக்குதலை நடத்திய வன்முறைக்கு பின்னால் ஏபிவிபி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.