புதுடில்லி: அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட, ஆனால் தம் பெற்றோருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள், தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று இந்தியாவின் சட்டமா அதிபர் கே.கே.வேணுகோபால் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.

என்.ஆர்.சி யின் கீழ் பெற்றோருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு, ஆனால் அதிலிருந்து விடுவிக்கப்பட்டக் குழந்தைகளின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை

என்.ஆர்.சி.யின் கீழ் பெற்றோருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட ஆனால் தாம் அதிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில்  ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் கூறியது. இந்த முரண்பாட்டின் விளைவாக, இந்த குழந்தைகள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது.

இந்த குடும்பங்கள் பிரிக்கப்படாது என்று இன்று வேணுகோபால் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரிடம் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழியை சமர்ப்பித்த வேணுகோபால், “குழந்தைகள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவதையும் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெற்றோருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட குழந்தைகள் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.”

இந்த மனு தொடர்பாக நீதிமன்றம் இந்திய யூனியன் மற்றும் அசாம் அரசாங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், நான்கு வாரங்களுக்குள் பதில் கோரியது.