வாஷிங்டன்:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் ராணுவ தளபதியை கொன்றிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்கா மீது யுகே, இங்கிலாந்து உள்பட நட்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன.
ஈரானுடனான மோதல்கள் மேலும் அதிகரிப்பது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவை எச்சரித்து உள்ளன.
ஈரானின் எண்ணை வளத்தை கருத்தில்கொண்டு, அமெரிக்கா ஈரானை வசப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஈரான்மீது பொருளாதார தடைகளை விதித்து, அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி உள்ளது. இதனால் அங்கு அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளனர். உள்ளாட்டு போர் மூளும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், நேற்று அமெரிக்க, ஈராக் கூட்டுப்படைகள் டிரோன்கள் மூலம் ஈரான் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டார். அதே போல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிரம்பின் தன்னிச்சையான முடிவுக்கு அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் கண்டனம் தெரி வித்து உள்ளனர். டிரம்ப் நட்பு நாடுகளை கலந்தாலோசிக்காமல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு அதிருப்தி தெரிவித்ததுடன், இதனால் மற்ற நாடுகளுக்கு என்ன பயன் உள்ள என்று கேள்வி எழுப்பி, உள்ளது. பல முன்னணி ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்து டிரம்பின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானுடனான மோதலில் “எங்கள் நலன் எதுவுமில்லை” என்று வலியுறுத்தி உள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவருமான டாம் துஜெந்தாட், இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க கூட்டளிகளிடம் பகிர்ந்துகொள்ளவில்லை, இது ஒரு முறை, சோகமானதும், சற்று அவமானகரமானது மற்றும் அது கவலைக்குரிய விஷயம்” என்று கண்டித்துள்ளார்.
இதுபோன்ற தகவல்களை “நட்பு நாடுகளுடன், குறிப்பாக நாங்கள் உட்பட பிராந்தியத்தில் இணைந்து போராடு பவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பகிர்ந்து கொள்ளுமாறு அமெரிக்க நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.
அமெரிக்க பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் ஈரான்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவை சேதப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், டிரம்பின் முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல் மட்டுமே ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் உலகளாவிய எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.