லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மருத்துவமனையில், கடந்த 12 மாதங்களில்  ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர்  அகிலே‌‌ஷ் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் குறை பாடு காரணமாகக் கடந்த மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உ.பி. மாநில முதல்வர் யோகி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், யோகியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் மாநில முதல்வருமான அகிலேஷ்யாதவ், உ.பி. மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் நிகழும் குழந்தைகள் மரணம் குறித்து விமர்சித்து  உள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கோரக்பூரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வேறு மருந்துகள் தரப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த  12 மாதங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஏன் தவறான மருந்துகள் தரப்பட்டன? இதற்கு பதில் சொல்ல போவது யார்? என்று கேள்வி எழுப்பியவர்,  இதில் உண்மை வெளிவர வேண்டும்; . இறந்த குழந்தைகள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

[youtube-feed feed=1]