டாக்கா:

ந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 455 பேர் திரும்பி வந்துள்ளதாக, வங்கதேச ராணுவம் அதிகாரி  தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கே அனுப்பும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கி கடந்தஆகஸ்டு மாதம்  பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் அசாம்  மாநிலத்தில், 19 லட்சம் பேர் பெயர் சேர்க்கப்படவில்லை.  தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 445 பங்களாதேஷ் பிரஜைகள் இந்தியாவில் இருந்து,  வங்கதேசத்துக்கு திரும்பி வந்துள்ளதாக வங்கதேச துணை ராணுவப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த பங்களாதேஷ் எல்லைக் காவலர் (BGB) இயக்குநர் ஜெனரல் மேஜ் ஜெனரல் Md  ஷபீனுல் இஸ்லாம்,  “இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு சட்டவிரோதமாக எல்லை தாண்டியதற்காக 2019-ஆம் ஆண்டில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 445 பேர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீடு திரும்பியுள்ளனர்”.

அவர்களை, இங்குள்ள உள்ளூர்  அதிகாரிகள் மூலம் அடையாளங்கள் சரிக்கப்பட்டு, அவர்கள்  பங்களாதேஷியர் கள் என்பதை உறுதி செய்து கொண்டதாகவும், மேலும், சட்டவிரோதமாக அத்துமீறல் செய்ததற்காக 253  பேர் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற அத்து மீறல்களால், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் எல்லைப் படைகளுக்கு இடையே எந்தவித பதற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தவர், இந்தியாவில் என்ஆர்சியை உருவாக்குவது, அந்த நாட்டின் “உள் விவகாரம்” , அதில் நாம் தலையிடக்கூடாது என்றவர், , இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நல்ல முறையில் தொடர்வாகவும் கூறினார்.