ஸ்ரீவில்லிபுத்தூர்:

மிழக ஊரகப்பகுதிகளான உள்ளாட்சி தேர்தலில், துப்புரவு பணியாளர் ஒருவரை, பஞ்சாயத்து தலைவராக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து திமுக போராட்டத்தில் குதித்து உள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கன்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த சரஸ்வதி என்பவர் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேர்தலில் களமிறங்கினார்.

இன்று வெளியான வாக்கு எண்ணிக்கையில், சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் பஞ்சாயத்து தலைவராக தேர்வாகி உள்ளார்.

[youtube-feed feed=1]