சென்னை

ன்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தினமாகும் என்பதால் அது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.

வரும் மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.  இந்த தேர்வானது பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆகும்.  இந்த தேர்வை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் தேர்வு எழுதிய மாணவர்களும் எழுத முடியும்.

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடைபெற உள்ளது.  வரும் மே மாதம் 3 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த தேர்வு தென் இந்திய மொழிகளில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டும் நடைபெற உள்ளது.  இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் கல்லூரிகளில் இடம் பெறலாம்.

இந்த தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.  கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவு இன்று இரவு நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது.   இந்த பதிவு தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் ஏராளமான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டி இருந்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.   எனவே இந்த இறுதித் தேதி நீட்டிக்கப்படும் என மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.