சென்னை: அரையாண்டுத் தேர்வு விடுமுறைகள் முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.
2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஜன2ம் தேதி நள்ளிரவு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பள்ளிகளை ஜனவரி 3ம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜன.4 ஆம் தேதி திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஜனவரி 3ம் தேதி பள்ளியை தொடங்கினால், 2020ம் ஆண்டின் முதல்வேலை நாள் புத்துணர்வோடு தொடங்க ஏற்ற சூழல் இருக்காது என்ற கருத்து பரவியது.
இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஒருநாள் தள்ளி வைத்து ஜன. 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.