சென்னை:

டுத்து கோயிந்தா போட்டு அங்க பிரதட்சனம் செய்வாங்க என்று திமுகவினர் கோலப் போட்டம் குறித்து பாஜக தலைவர் எஸ்.வி.சேகர் கலாய்த்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில், திமுக தலைமை, NO CAA, NO NRC என கோலம் போட்டு திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்றுமுதல் திமுகவினர், திமுக மகளிர் அணியினர், திமுக கூட்டணி கட்சியினர் தங்களது இல்லங் களின் வாசல்களில், NO CAA, NO NRC என கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்காகி உள்ளது.

நாத்திகம் பேசும் திமுக, கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ள நிகழ்வுகளும், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது.

இந்த நிலையில், திமுகவின் கோலம் போராட்டம் குறித்து, பாஜக தலைவர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,  ‘மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளை கோலம் போட வைத்து, மத கட்சி பேதமின்றி தேசீயக்கொடியை ஏந்த வைத்து, நம் இந்திய திரு நாட்டை ஒன்று படுத்திய நம் பிரதமருக்கு நன்றி சொல்வோம்.’ என்று நக்கலாக கலாய்துதுள்ளார்.

அத்துடன்  குடியுரிமைக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலங்களை போட்டும் டிரென்டிங் செய்துள்ளார்.

எஸ்வி.சேகரின் டிவிட்டும் வைரலாகி வருகிறது.