சென்னை:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. . மதியம் 1 மணி நிலவரப்படி 45.76 % சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 27 மாவட்டங்களில், 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது 46,639 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தே தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், மதியம் 1 மணி அளவில் 4576 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
காலை 9 மணிக்க 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி அளவில், 25.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தது.
காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.