மதுரை:

ரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வற்கான விதிகள் ஏற்கனவே உள்ளன என்றும் அவை மீறப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டரை நாட்கள் உள்ள நிலையில், அதனை ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான  குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது என்றும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளது” எனவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையாக இயங்கக்கூடிய அமைப்பு என்றும் அது நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை மதியம் ஒன்றேகால் மணிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரு, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வீடியோ பதிவு செய்யப்படும் என்றும்,  வாக்குச் சீட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில்  உத்தரவாதம் அளித்தது.

இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.