க்னோ

தரவற்ற மக்களுக்கு உ பி முதல்வர் யோகி அளித்த போர்வையைத் திரும்பப் பெற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் கடந்த 27 ஆம் தேதி அன்று அம்மாநில முதல்வர் ஆதரவற்றோருக்குப் போர்வைகள் வழங்கினார்.    ஆதரவற்றோர் விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ளோருக்கு இந்த போர்வைகள் வழங்கப்பட்டன.   இந்த நிகழ்வுகளில் அவருடன் மாநில அமைச்சர்கள் மகேந்திர பிரதாப் சிங், அசுதோஷ் டண்டன், மாவட்ட நீதிபதி மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு லக்னோ நகரில் உள்ள லட்சுமன் மைதானம், டோலிகஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றோர் விடுதிகள் மற்றும் ஜார்ஜ் மெடிகல் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்தது.  இந்த இடங்களில் முதல்வர் யோகி பயனாளிகளுக்கு போர்வையை வழங்கி விட்டு அங்கிருந்து சென்ற உடன் சிலர் அவர்களிடம் இருந்து போர்வைகளை திரும்ப வாங்கிக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அந்த விடுதிகளின் அமைப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரின் அடிப்படையில் லக்னோ காவல்துறையினர் அவ்வாறு போர்வையைத் திரும்ப வாங்கிக் கொண்டவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.  இவ்வாறு போர்வையைத் திரும்ப வாங்கிக் கொண்டவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.