டாப் 30 டிவி சீரிஸ் பட்டியலில் 12 இடங்களில் பிரிட்டிஷ் சீரிஸ்களே இடம்பெற்றுள்ளன. கலாச்சாரம், மொழி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் உலக சீரிஸ்களை ரசிக்கும் வகையில் ‘சப்டைட்டில்ஸ்’ என்னும் வசதி பெரும் பயனாய் அமைந்துள்ளது.

உலக அளவில் சிறந்த டாப்-30 டிவி சீரிஸ் பட்டியலில் இந்திய சீரிஸ் இடம்பெற்றுள்ளது பெரும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ்-ன் டாப் 30 டிவி சீரிஸ் பட்டியலில் 12 இடங்களில் பிரிட்டிஷ் சீரிஸ்களே இடம்பெற்றுள்ளன. அனைத்துத் தரப்பினரும் உலக சீரிஸ்களை ரசிக்கும் வகையில் ‘சப்டைட்டில்ஸ்’ என்னும் வசதி பெரும் பயனாய் அமைந்துள்ளது.

மிகச்சிறந்த சீரிஸ் ஆக இஸ்ரேலிய சீரிஸான ‘ப்ரிசனர்ஸ் ஆஃப் வார்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் பிரிட்டனின் ‘ஷெர்லாக்’ உள்ளது.

மூன்றாம் இடத்தை பிரான்ஸின் ‘தி ப்யூரோ’ பெற்றுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான சீரிஸ்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானவை.

இந்திய சீரிஸ் ஆன ‘சேக்ரட் கேம்ஸ்’ இப்பட்டியலில் 28-ம் இடம் பிடித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர்கள் சயீஃப் அலிகான், நவாசுதின் சித்திக் ஆகியோர் நடித்திருப்பார். இரண்டு சீசன்கள் இதுவரையில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது.

சேக்ரட் கேம்ஸ் சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விக்கிரமாதித்யா மற்றும் நீரஜ் கேவன் இணைந்து இயக்கியுள்ளனர்.