இயக்குநர்கள் பாரதிராஜா – பாலா இருவரும் மோதிக்கொண்டு இறுதியாக பாரதிராஜா ‘குற்றப் பரம்பரை’ படத்தை தேனியில பூஜை போட்டார்.
ஆனால் பூஜை போட்டதோடு சரி, படப்பிடிப்பு தற்போதுவரை தொடங்கப்படாமலேயே இருக்கிறது. பாரதிராஜாவும் சரி பாலாவும் சரி அவரவர் பணிகளில் பிஸியாகிவிட்டார்கள் .
இந்நிலையில், ‘குற்றப் பரம்பரை’ கதையை வெப் சீரிஸாக எடுக்க முடிவு செய்துள்ளார் பாரதிராஜா. அவரே நடித்து, இயக்கவுள்ள இந்த வெப் சீரிஸை, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.